search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் போலீஸ் படை"

    சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய 8 நகரங்களில் பாலியல் குற்றங்களை தடுக்க மகளிர் போலீஸ் படை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. #WomenPoliceForce #CrimesAgainstWomen
    புதுடெல்லி:

    பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதைத் தொடர்ந்து பெண்கள் சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய 8 நகரங்களில் பெண்கள் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

    2018-19 முதல் 2020-21 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி 8 நகரங்களிலும் அனைத்து மகளிர் போலீஸ் ரோந்து படை அமைக்கப்படும்.

    மேலும் பொதுமக்கள் எப்போதும் தொடர்பு கொள்ளும் வகையில் ‘பேனிக் பட்டன்’ போக்குவரத்தில் பெண்கள், சிறுமிகள் தங்குமிடம், ஸ்மார்ட் எல்.இ.டி. தெருவிளக்குகள், தடயவியல் மற்றும் சைபர் குற்றம் குழு உள்ளிட்டவை பெண்கள் சிறப்பு பாதுகாப்பு திட்டத்தில் அடங்கும்.


    2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்சில் இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்டார். நிர்பயா (கற்பனை பெயர்) என்ற அந்த பெண்ணின் பெயரில் பெண்கள் பாதுகாப்புக்கு என்று அமைப்பு தொடங்கப்பட்டது. 2013 நிர்பயா பண்ட் அமைக்கப்பட்டது.

    நிர்பயா நிதி அமைப்பின் கீழ் மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

    பெண்கள் பாதுகாப்புக்கான இந்த திட்டத்துக்கு சென்னை நகருக்கு ரூ.425.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் ரூ.663.67 கோடியிலும், மும்பையில் ரூ.252 கோடியிலும், அகமதாபாத்தில் ரூ.253 கோடியிலும், கொல்கத்தாவில் ரூ.181.32 கோடியிலும், பெங்களூரில் ரூ.667 கோடியிலும், ஐதராபாத்தில் ரூ.282.50 கோடியிலும், லக்னோவில் ரூ.195 கோடியிலும் இந்த திட்டம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #WomenPoliceForce
    ×